Sunday, June 28, 2009

திருக்காரவாசலில் தியாகராஜர்

கண்ணாயிரநாதருக்குச் சமமாக, பக்கத்திலேயே ஆதிவிடங்க தியாகராஜரின் சன்னதி அமைந்திருக்கிறது. தேவேந்திரனால் உருவாக்கப்பட்டவர் இந்த தியாகராஜர்.

இந்த திருக்காரவாசலில் தியாகராஜர் வீர சிங்காதனத்தில் குக்குட நடனக் காட்சியுடன் அருள்புரிகிறார். திருவாரூரில் வீதிவிடங்க தியாகேசரின் அஜபா நடனத்தைக் கண்டுகளித்த பதஞ்சலி முனிவர், எல்லா வகை நடனங்களையும் தனக்குக் காட்டி அருளிய வேண்டுமென்று இறைவனிடம் வேண்டினார். "திருக்காறாயில் வந்தால் காணலாம்" என்று தியாகராஜர் ஆணை இட்டு, ஆடிக் காட்டிய தலம்தான் இந்த திருக்காரவாசல்.

5 comments:

  1. திருக்காரவாசல் திருக்கோவிலில் நடைபெறும் திருக்கல்யாணம்

    ReplyDelete
  2. திருக்காரவாசலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு எல்லா வித செல்வங்களும், வளமும், வாழ்வில் நலமும், கிடைக்க செய்யும் திருத்தலம் திருக்காறாயில்

    ReplyDelete
  3. முன்வாசலில் உள்ள நந்தி இறைவனை தாண்டி உட்சென்றால் மூன்று நிலைகளை உடைய உட்கோபுரம். கோபுரத்தின் உட்புறம் வலமாக வரும்போது தலப்பதி கல்வெட்டு, சுந்தரர் உற்சவ சன்னதி, தியகரஜசபை, பல சிவலிங்கதிருமேனிகள், மஹாவிஷ்ணு, சுப்பிரமணியர், சரஸ்வதி, கஜலக்ஷ்மி, பைரவர் முதலான சன்னதி உள்ளன.

    ReplyDelete
  4. தியகரஜசபை அழகானது, பெருமான் ஆதிவிடங்கர் சபை உயரத்தில் அழகான பிரபையுடன் காட்சியளிக்கிறது. ஆதிவிடங்கர் வீற்றிருப்பது வீர சிம்மாசனம், நடனம் - குக்குட நடனம். தியாகராஜர் சன்னதியில்
    வெள்ளிப்பெழையில் மரகதலிங்கம் உள்ளது. தியாகராஜருக்கு நேர் எதிரில்
    சுந்தரர் சன்னதி அமைந்துள்ளது.

    ReplyDelete
  5. 1.அஜபா நடனம் என்பது என்ன? இதை
    சிவபெருமான் ஆடியது எங்கே?
    -அஜபா நடனம்- சிவபெருமான் மேல்மூச்சில்,
    கீழ்மூச்சில் (தவளை போல்) அசைந்தாடிய
    நடனம். ஆடிய தலம்- திருவாரூர்.

    2. உன்மத்த நடனம் என்பது என்ன? இதை
    சிவபெருமான் ஆடியது எங்கே?
    -சிவபெருமான் பித்தனைப் போல் தலை
    சுற்றி ஆடிய நடனம் உன்மத்த நடனம் ஆகும்.
    ஆடிய தலம்- திருநள்ளாறு.

    3. தரங்க நடனம் என்பது என்ன? இதை
    சிவபெருமான் ஆடியது எங்கே?
    -தரங்க நடனம் என்பது கடல் அலைபோல்
    அசைந்து ஆடுவது. இதை சிவபெருமான்
    நாகப்பட்டினத்தில் ஆடினார்.

    4. குக்குட நடனம் என்பது என்ன? இதை
    சிவபெருமான் ஆடியது எங்கே?
    -குக்குட நடனம் என்பது கோழி போல் ஆடுவது.
    ஆடிய தலம் - திருக்காறாயில்.

    5. கமல நடனம் என்பது என்ன? இதை
    சிவபெருமான் ஆடியது எங்கே?
    -கமல நடனம் என்பது தாமரை காற்றில்
    அசைவது போல் ஆடுவது. ஆடிய தலம்-
    திருவாய்மூர்.

    6. ஹம்சபாத நடனம் என்பது என்ன? இதை
    சிவபெருமான் ஆடியது எங்கே?
    -ஹம்சபாத நடனம் என்பது அன்னம் போல்
    அடியெடுத்து ஆடுவது. ஆடிய தலம்-
    திருமறைக்காடு (வேதாரண்யம்)

    ReplyDelete