Sunday, June 28, 2009

திருக்காரவாசலில் தியாகராஜர்

கண்ணாயிரநாதருக்குச் சமமாக, பக்கத்திலேயே ஆதிவிடங்க தியாகராஜரின் சன்னதி அமைந்திருக்கிறது. தேவேந்திரனால் உருவாக்கப்பட்டவர் இந்த தியாகராஜர்.

இந்த திருக்காரவாசலில் தியாகராஜர் வீர சிங்காதனத்தில் குக்குட நடனக் காட்சியுடன் அருள்புரிகிறார். திருவாரூரில் வீதிவிடங்க தியாகேசரின் அஜபா நடனத்தைக் கண்டுகளித்த பதஞ்சலி முனிவர், எல்லா வகை நடனங்களையும் தனக்குக் காட்டி அருளிய வேண்டுமென்று இறைவனிடம் வேண்டினார். "திருக்காறாயில் வந்தால் காணலாம்" என்று தியாகராஜர் ஆணை இட்டு, ஆடிக் காட்டிய தலம்தான் இந்த திருக்காரவாசல்.

Thursday, June 25, 2009

திருஞானசம்பந்தரால் பாடி அருளிய ஸ்தலம் - திருக்காரவாசல்


'பிறையானே பேணிய

பாடலொடின்னிசை

மறையானே மாலோடு நான்

முகன் காணாத

இறையானே யெழில் திகழும்

திருக்காறாயில்

உறைவானே யென்பவர் மேல்

வினையோடுமே'

என்று இந்த இறைவனைப் பற்றிப் பாடுகிறார் திருஞானசம்பதர்.

Wednesday, June 24, 2009

கண்ணாயிரநாதர் - பெயர் காரணம் மற்றும் சிறப்பு

பிரம்மாவிற்கு, 'தான்தான் எல்லாம்' என்று ஒரு முறை கர்வம் வந்தது. சிவப்பெருமானைக் கூட வழிபடாமல் இருந்தார். அவ்வளவுதான். அவரது பதவி பறிபோய், நட்டாற்றில் நின்றார். பின்னர் விஷ்ணுவின் உபதேசத்தால், காரை மரங்கள் நிறைந்திருந்த திருக்காறாயில் (திருகாரவாசல்) வந்து இறைவனை நினைத்து ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்தார். சிவபெருமான், ஆயிரம் கண்களுடன் அவருக்குக் காட்சி தந்தார். எனவே கண்ணாயிரநாதர் என பெயர் பெற்றார்.

திருக்காரவாசல் வந்து இந்த கண்ணாயிரநாதர் ஐ வழிப்பட்டால், ஆயிரம் கண்கள் உடைய இந்த ஈசன் உங்கள் கண்களை நிச்சயம் குனபடுத்துவார்.

திருத்தலத்தின் வைகாசி மாத திருவழா புகைப்படங்கள்

வைகாசித் திருவிழா புகைப்படங்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

Monday, June 22, 2009

திருக்காரவாசலில் காட்சி தரும் மூன்று பைரவர்கள்

இந்த திருத்தலத்துக்கு வந்தாலே உங்களுக்கு நல்லகாலம் ஆரம்பம் தான் என்பதைச் சொல்லுவது போல காலை,மதியம், இரவு என்று மூன்று காலங்களிலும் வணங்க வேண்டிய மூன்று பைரவர்கள் அருகருகே இங்கே தரிசனம் செய்வதைக் காணலாம்.

காலையில் வணங்க வேண்டிய கா(லை) பைரவர், மதியம் வணங்க வேண்டிய உச்சிக்கால பைரவர், அர்த்த ஜாமத்தில் வணங்க வேண்டிய சொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி விசேஷமானது. அதுவும் மூன்று பைரவர்களுக்கு நேர் எதிரில் மகாலக்ஷ்மி பார்த்துக் கொண்டே இருப்பதால் இவர்களை வணங்கினால் செல்வம் உங்களை சேரும்.

Sunday, June 21, 2009

திருக்காரவாசல் வில்வ மர சிறப்புகோயிலுள் நுழையும் போதே இடதுபுறம் காட்சி தரும் வில்வ மரம் ஒரு அதிசயமாகும். ஒற்றை இரட்டை இலைகளைத்தான் நீங்கள் பார்த்து இருப்பீர்கள், ஆனால் இங்கே மட்டும் ஐந்து வில்வ இலைகளாக ஆரம்பித்து மேலே செல்ல செல்ல 7,9 என்று ஒரே கொத்தில் அத்தனை இலைகள் அதிசயமாக அமைந்து இந்த திருகாரவாசல் ஆலயமும் அதிசயமானதுதான் , அபூர்வமானதுதான் என்பதை பறைசாற்றுகிறது.

திருத்தலத்தின் பலன்கள்

1. எல்லாவிதமான கண் சம்பந்தமான பிரச்சனைகளும் தீரும்.

2. திருமணமும் தொடர்ந்து குழந்தை பாக்கியமும் கிட்டும்.

3. வசதி, வாய்ப்புகள் பெருகும்.

4. உங்கள் மீது சுமத்தப்பட்ட அபாண்ட பழிகள் நீங்கும்.

5. அதீதமான காம உணர்வுகள் கட்டுப்படும்.

ஸ்தல வரலாறு


சோழ வள நாட்டில் விடங்கத் திருமேணி கொண்டு விளங்கும் திருத்தலங்கள் ஏழிநுல் ஒன்று திருகாரைவாசல் என வழங்கும் திருக்காறாயில் என்னும் திருத்தலமாகும். திருவாரூர்லிருந்து திருத்துறைபூண்டி செல்லும் வழியில் 12 கி.மீ தூரத்தில் இத்தளம் அமைந்துள்ளது.

திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற இத்தளம் மூர்த்தி, தலம், தீர்த்தம், மூன்றாலும் சிறப்பு பெற்றது. கபிலர் முதலிய முனிவர்களாலும், இந்திரன் முதலான தேவர்களாலும், பூசிக்கப்பெற்றது. இறைவன் பெயர் அருள்மிகு கண்ணாயிரநாதர். இறைவியின் பெயர் அருள்மிகு கைலாச நாயகி. இறைவி "பஞ்ச்சதசா ஷர" சொரூபிணியாக விளங்குகிறாள் என்று புராணங்கள் கூறுகின்றன. இத்தலத்தில் இறைவிக்குத் தனிச்சிறப்பு உண்டு. மக்கள் செய்த பாவங்களால் உலகில் தலங்கள் மகிமை குன்றிய காலத்தில் பராசக்தியே இத்தலத்தை உயர்த்தினார் என்பது புராண வரலாறு. விடங்கத் திருமேணி கொண்டிருக்கும் இறைவன் பெயர் அருள்மிகு ஆதி விடங்கத் தியாகராஜர். வைகாசி விசாகத் திருவிழாவில் குக்குட நடனத்துடன் அருள்மிகு தியாகராஜர்
எழுந்தருளுவது சிறப்பான காட்சி.

அருள்மிகு கைலாசநாயகிக்கு நடைபெறும் மாதாந்திர பௌர்ணமி அபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதில் வைத்துத்தரும் சேஷ தீர்த்தத்தை ஒரு மண்டலம் சாப்பிட்டுவர தீராத நோய்களும் தீர்கின்றன என்பது பக்தர்களின் நம்பிக்கை.

தேவகோட்டை முத்து கரு.அரு.முத்து.க.மா.மு, முத்து.க.அலெ, குடும்பத்தாரால் இவ்வாலயம் திருப்பணி செய்யப் பெற்று 1918-இல் கும்பாபிஷேகம் செய்யப் பெற்றது.

மேலும் முத்து.கரு.அரு.குடும்பத்தாரால் 1951-இல் இரண்டாவது கும்பாபிஷேகம் , மேற்படி முத்து.கரு.அரு.கரு.அரு குடும்பத்தாரின் முயற்சியாலும், மெய்யன்பர்களின் பொருள் உதவியாலும் , 1987 இல் மூன்றாவது கும்பாபிஷேகமும், 2005 இல் நான்காவது கும்பாபிஷேகமும் இனிது நடத்தப் பெற்றது.

இத்தகு புராண வரலாற்று சிறப்பு மிக்க இவ்வாலயம் பழுது பார்க்க வேண்டிய நிலையில் உள்ளது. "வேண்டுவோர்க்கு வேண்டுவது"அருளும் இத்திருகோயில் திருப்பணி இனிது நடந்தேற இவ்வேண்டுகோளின்னைக் கண்ணுறும் மெய்யன்பர்கள் தங்களால் இயன்ற உதவி செய்து ஆலயத் திருப்பணியில் பங்கு பெற்று இறைவன் அருள் பெற வேண்டுகிறோம்.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

AR Karuppan Chetty
Managing Trustee
Tirukaravasal Arunachalam Chettiar Charitable Trust
Muthu KR AR Building
South St, Thirukaravasal Post,
Thiruvaarur Dt - 610202.

19, New Raja Colony
Beema Nagar, Trichy - 1.

email : ping2sriram@yahoo.com