திருக்காரவாசலில் காட்சி தரும் குரு பகவான், ஞான மகாகுரு. அவர், தலையில் குண்டலினி சக்தியுடன் காட்சியளிப்பது அபூர்வமான ஒன்று. ஞான மகாகுரு எதிரில் அகத்தியர் சுவடி படிக்கும் காட்சி அமைந்திருக்கிறது. அதனால் நாடி ஜோதிடம் துவங்கிய கோயில் இதுதானோ என்று தோன்றுகிறது.
பொதுவாக சிவன் கோயிலில் மாரியம்மன் இருக்க மாட்டார். ஆனால் இங்கே மாரியம்மன் அழகுற காட்சி தருகிறாள். இவளுக்கு அபிஷேகம் செய்தால் அம்மை போன்ற நோய்கள் வராது என்பது பக்தர்களின் நம்பிக்கை.
Thursday, July 30, 2009
Friday, July 3, 2009
திருக்காரவாசல் - கடுக்காய் விநாயகர்
ஒரு வணிகன், ஜாதிக்காய் மூட்டைகளுடன் வண்டியில் இந்தப் பக்கம் வந்தான். இரவு இந்தக் திருக்குளம் கரையில் தங்கினான். அப்போது ஒரு சிறுவன், "வண்டியில் என்ன?" என்று கேட்க, "கடுக்காய்" என்று பொய் சொன்னான் வணிகன்.
மறுநாள் காலையில் பார்த்தால் ஜாதிக்க்காயகள் எல்லாம் கடுக்காய்களாக மாறி இருந்துன. சிறுவனாக வந்தவர் விநாயகர்தான் என்பதை உணர்ந்த வியாபாரி, தன் தவறுக்கு வருந்த, மீண்டும் ஜாதிக்காயகளாக மாறின. ஆனால் பிள்ளையார் மட்டும் 'கடுக்காய் விநாயகர்' ஆகிவிட்டார்.
மறுநாள் காலையில் பார்த்தால் ஜாதிக்க்காயகள் எல்லாம் கடுக்காய்களாக மாறி இருந்துன. சிறுவனாக வந்தவர் விநாயகர்தான் என்பதை உணர்ந்த வியாபாரி, தன் தவறுக்கு வருந்த, மீண்டும் ஜாதிக்காயகளாக மாறின. ஆனால் பிள்ளையார் மட்டும் 'கடுக்காய் விநாயகர்' ஆகிவிட்டார்.
Wednesday, July 1, 2009
திருக்காரவாசல் தீர்த்தங்கள்
முதலாம் ராஜராஜன் மற்றும் ராஜேந்திர சோழன் காலத்தில் திருப்பணி செய்யப் பட்ட இந்தக் கோயிலில் இரண்டு தீர்த்தங்கள் உள்ளன. ஆதிசேஷனால் உருவாக்கப்பட்ட 'சேஷ தீர்த்தம்' என்னும் கிணற்று நீர், மருத்துவ குணம் மிக்கது. ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் அம்பிகைக்கு அந்த நீர் அபிஷேகம் செய்யப்பட்டு வேண்டுவோர்க்கு அளிக்கப் படும். இன்னொரு தீர்த்தம் பிரம்மா தீர்த்தம் என்னும் திருக்குளம். இதன் கரையில் கடுக்காய் விநாயகர் சன்னதி உள்ளது. அதை பற்றி அடுத்த இதழில் காண்போம்.
Subscribe to:
Posts (Atom)